FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள பெரு வெள்ளத்துக்கு முன்பும் பின்பும்! செயற்கைக் கோள் புகைப்படம்

நேபாள பெரு வெள்ளத்துக்கு முன்பும் பின்பும் வெளியான செயற்கைக் கோள் புகைப்படம் பற்றி..

23 வினாடிகள் முன்பு
செயற்கைக்கோள் புகைப்படம் - video grab
பகிர்:

திபெத்தின் எல்லைப் பகுதிக்கு அருகே நேபாளத்தில் போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ள சம்பவத்துக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

நேபாள பெரு வெள்ளத்துக்கு முன்பு, அழகிய மலைப் பகுதியும், அதற்குள் ஊடுருவி பாய்ந்து வந்த போடே கோஷி ஆற்றின் வளைவுகளும் செயற்கைக் கோள் புகைப்படத்தில் பதிவாகியிருக்கிறது. ஆனால், பெருவெள்ளம் நேரிட்ட பிறகு மலைப் பகுதியை இரண்டாப் பிளந்துகொண்டு ஒரு பெரிய ஆறு சேற்றையும் குப்பைகளையும் நிரப்பிச் சென்றதால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பினால் மலையின் பசுமை நிறமே மாறியிருப்பது பதிவாகியிருக்கிறது.

இமயமலைக்கு அருகே மிகப்பெரிய பனிப்பாறைகளின் கீழ் பகுதியில் ஏற்பட்ட சரிவின் தொடர்ச்சிதான் இந்த பெரு வெள்ளத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று செயற்கைக் கோள் புகைப்படங்கள் வாயிலாக கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முன்கூட்டியே வெளியான தகவல்கள், நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு காரணமாக பனிப்பாறைகள் உருண்டு, சரிந்து விழுந்து பெருவெள்ளம் நேரிட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனல், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, நில அதிர்வு நடவடிக்கை பனிப்பாறைகள் இடிந்து விழுதல் நிகழ்விலிருந்தே உருவானது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பனிப்பாறைகளின் கடைசி கீழ் பகுதியில் ஏற்பட்ட சரிவே காரணம் என்பதையும் செயற்கைக்கோள் காட்சிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரே ஒரு பனிப்பாறையின் உடைதல் அல்லது அதில் ஏற்பட்ட மாற்றமே இந்த பேரழிவுக்குக் காரணமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த நிலநடுக்கம் நேரிடுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு, இமயமலையின் மேற்பகுதியில் சில மாற்றங்கள் நேரிட்டிருப்பதும் பதிவாகியிருக்கிறது. சில இடங்களில் மூடப்பட்டிருந்த பனிப்படலங்கள் மறைந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்பம் அதிகரித்து, அதன் காரணமாக இந்த பனிப்பாறை உடைந்து நேரிட்ட பேரிடராக இது இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இதனை உறுதி செய்வதற்கான தரவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

summary

Before and after the massive floods in Nepal! Satellite images

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments