FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளத்துக்கு யார் காரணம்? விளக்கமளித்த சீனா!

நேபாள வெள்ளத்துக்கு சீனா காரணம் என்ற விமர்சனத்துக்கு அந்த நாடு விளக்கம் அளித்துள்ளது குறித்து...

நேபாள வெள்ளம் - ANI
பகிர்:

நேபாள வெள்ளத்துக்கு சீனத்தின் நீர்மின் திட்டங்கள்தான் காரணம் என்ற விமர்சனத்தை அந்த நாடு திங்கள்கிழமை (ஆக. 31) மறுத்துள்ளது.

நேபாள - திபெத் எல்லையில் பனிப்பாறைகள் உடைந்து நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

இந்தப் பேரிடரில் சிக்கி இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 4000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

நேபாள எல்லையில், பனிச்சரிவு ஏற்பட்டு தடைபட்டிருந்த திபெத்திய ஆற்றின் நீரோட்டம் உடைபட்டு அதிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறியதே நேபாள பெரு வெள்ளத்துக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், பனிப்பாறை உடைந்த பகுதியில் சீனாவால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புகளே வெப்பம் அதிகரித்து பனிப்பாறை உடையக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவாதங்கள் சீனா மீதான விமர்சனங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதற்கு விளக்கமளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்ததாவது:

சீனா மற்றும் நேபாளத்தின் நிபுணர்களும் அதிகாரப்பூர்வ நிறுவனங்களும் பேரிடருக்கான காரணம் குறித்து சில மதிப்பீடுகளைச் செய்துள்ளதை நாங்கள் கவனித்தோம்.

துயரமான பேரழிவுகளை எதிர்கொள்ளும் இந்த வேளையில், ​​பொய்யான தீய யூகங்களை நாங்கள் மறுக்கிறோம்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஒழுங்கான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தகவல்களை வெளியிடுவதில் வெளிப்படையாகவும், ஒளிவுமறைவின்றியும், சரியான நேரத்திலும் சீனா செயல்பட்டு வருகிறது. பேரிடர் மீட்புப் பணிகள் நடைபெறும் இந்த நேரத்தில் தவறான தகவல்களும், குற்றச்சாட்டுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று குறிப்பிட்டார்.

summary

China rejected on Monday (Aug. 31) the criticism that its hydropower projects were the cause of the floods in Nepal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments