FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளத்தில் பலியானோர்களை இணையதளம் மூலம் அடையாளம் காணும் பணி!

நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்கள் எப்படி அடையாளம் காணப்படுகிறது? என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது பற்றி...

நேபாள வெள்ளம் - படம் - எக்ஸ்
பகிர்:

நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்கள் எப்படி அடையாளம் காணப்படுகிறது? என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பேரிடரில் சிக்கி இதுவரை 579 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு வரும் நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து நேபாள காவல்துறை அதிகாரி பேசியதாவது:

முதலில் இங்கு வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத உடல்களின் புகைப்படங்களை நாங்கள் காட்சிப்படுத்துகிறோம். புகைப்படங்களைப் பார்த்து ஒருவரை மக்கள் அடையாளம் கண்டுகொண்டால், அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அந்த உடலை அவர்களுக்குக் காண்பிப்போம்.

சரியாக அடையாளம் காணப்பட்ட பிறகு, உடல்கூராய்வுக்குப்பின் அது ஒப்படைக்கப்படுகிறது. அடையாளம் காணப்படவில்லை என்றால், அடுத்த கட்ட உடல்கள் ஆய்வுகளுக்காக இங்கேயே வைக்கப்படும். நவல்பராசி, சித்வான் மற்றும் நுவாகோட் ஆகிய இடங்கள் உள்பட அனைத்துப் பகுதியிலிம் மீட்கப்பட்ட உடல்களின் தகவல்களை நாங்கள் இணையதளத்திலும் பதிவேற்றுகிறோம்.

இங்கு கிடைக்கும் பதிவுகள், இந்த இடத்தில் வைக்கப்பட்ட உடல்களைப் பற்றியவை மட்டுமே; மற்றவை இணையதளத்தில் கிடைக்கின்றன என்று தெரிவித்தார்.

summary

The police have provided an explanation regarding how the bodies of the victims of the Nepal floods are being identified.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments