நேபாள வெள்ளத்தில் நெகிழ்ச்சி! பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தை!
நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து...
நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளைப் புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 939-ஆக உயா்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 85 பாதுகாப்பு அதிகாரிகள், 320 வெளிநாட்டவா் உள்பட 4,250 போ் மாயமாகினா்.
Advertisement
Advertisement
இதனிடையே, பெரு வெள்ளத்தில் சிக்கி, அதிருஷ்டவசமாக உயிருடன் தப்பிய ஒன்றரை மாதக் குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரமாக மீட்கப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தையை, ரசுவா தாங்கே முகாமில் மீட்புப் படையினர் சேர்த்துள்ளனர்.
Nepal: One-and-a-half-month-old baby rescued from flood-affected area
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.