FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓராண்டு சேமிப்பு… நேபாள வெள்ளத்துக்கு நன்கொடையளித்த 6 வயது சிறுவன்!

நேபாள வெள்ளத்துக்கு ஓராண்டு சேமிப்பை நன்கொடையளித்த சிறுவன் பற்றி..

7 செப்டம்பர் 2026, 12:25 pm IST
நேபாள வெள்ள நன்கொடை
பகிர்:

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, குஷிநகரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் தனது ஓராண்டு சேமிப்பை நன்கொடையாக வழங்கியது அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது.

ஆகஸ்ட் 26ல் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, கடந்த ஓராண்டாகத் தனது உண்டியல் சேமிப்பை நன்கொடையாக வழங்க குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் முன்வந்துள்ளான்.

குஷிநகர் மாவட்டத்தின் பத்ரௌனா தாலுகாவுக்கு உள்பட்ட பெட்டியா கிராமத்தைச் சேர்ந்த அல்பாஸ ஷேக் என்ற சிறுவன், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் நேபாள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மக்களின் துயரத்தைப் பார்த்து மிகவும் பாதிக்கப்பட்டான்.

Advertisement

Advertisement

செப்டம்பர் 3 அன்று, அந்தச் சிறுவன் தான் சேமித்துவைத்த உண்டியலை எடுத்துக்கொண்டு குஷிநகர் மாவட்ட ஆட்சியர் மகேந்தர் சிங் தவாரின் அலுவலகத்திற்குச் சென்றான். மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தான். அதில் உள்ள பணத்தை நிவாரண நிதியில் சேர்த்து நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டான்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுவனின் செயல், அவனது கருணையையும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் மனப்பான்மையையும் பாராட்ட வைத்தது.

பொதுவாகக் குழந்தைகள் பொம்மைகள் மற்றும் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பணம் சேமிக்கும் வயதில், அல்பாஸ் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவத் தனது ஓராண்டு சேமிப்பு முழுவதையும் வழங்க முடிவு செய்தான் என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர்

அண்டை நாட்டின் மீதான மனிதாபிமான உணர்வு மற்றும் நல்லெண்ணத்திற்கு இந்தச் சிறுவனின் முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,

சிறுவனின் விருப்பப்படியே அவனது சேமிப்பை நேபாளத்திற்கு அனுப்பத் தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதவியின் மதிப்பு என்பது அதிலுள்ள பணத்தின் அளவைப் பொறுத்தது அல்ல.. மாநாக அதன் பின்னணியில் உள்ள நோக்கத்தைப் பொறுத்தது என்பதையே சிறுவன் அல்பாஸின் செயல் நினைவூட்டியது.

வெள்ளத்திற்குப் பிறகு நேபாளத்திலிருந்து வந்த பாதிப்புக்குள்ளான காட்சிகளைப் பார்த்து தான் மிகவும் நெகிழ்ந்து போனதாகவும், தனது உண்டியலில் உள்ள சுமார் ரூ. 20,000 சேமிப்பை நன்கொடையாக வழங்க விரும்புவதாகவும் அச்சிறுவன் கூறியதாக அவனது தாத்தா கஸ்லிம் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றோம், அங்கு அல்பாஸ் தனது உண்டியலை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தான். சிறுவனின் தந்தை ரியாத்தில் பணிபுரிகிறார். நான்கு உடன்பிறப்புகளில் இவன் மூன்றாவது குழந்தையாவான்.

A six-year-old boy from Kushinagar district has won hearts by deciding to donate all of his savings, collected over the past year in a piggy bank, for the victims of devastating floods in neighbouring Nepal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments