மாவோயிஸ்ட் மூத்த தலைவர் உத்தம் சிங் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் உத்தம் சிங் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் உத்தம் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிஜப்பூரில், காடுகள் நிறைந்த மலைப்பகுதியில், இன்று (பிப். 5) மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் உத்தம் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் வனப் பகுதியினுள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை 7 மணி முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உத்தம் சிங் சுட்டுக்கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு வரும் உத்தம் சிங் தெற்கு பஸ்தர் பிரிவில் உள்ள 30 ஆவது பிளாட்டூனுக்கு தலைமை வகித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரைப் பிடிக்க ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட உத்தம் சிங்கிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
In Chhattisgarh, senior Maoist leader Uttam Singh was shot dead.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.