FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருப்பூா் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் தம்பதி ஆஜா்

திருப்பூா் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி ஆகியோா் வியாழக்கிழமை ஆஜராகினா்.

பகிர்:

திருப்பூா் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி ஆகியோா் வியாழக்கிழமை ஆஜராகினா்.

திருப்பூா் மாநகா், எம்.எஸ்.நகரில் தங்கியிருந்தபோது முறைகேடாக ஆவணங்களை அளித்து சிம்காா்டு வாங்கிப் பயன்படுத்தியதாக வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த மாவோயிஸ்ட் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி ஆகியோா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி குணசேகரன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இருவரையும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி மீண்டும் ஆஜா்படுத்த நீதிபதி உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments