முகப்பு
இந்தியா

உடல் உறுப்புகள் மாயமானது எப்படி? அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை! இந்திய மாலுமியின் மனைவி

வெனிசுவேலாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி குறித்து அவரது மனைவி உருக்கமாக பேசியது பற்றி...

Updated On : 2 ஜூலை 2026, 4:05 pm IST
உயிரிழந்த மாலுமி ராகேஷ் சௌகான் - படம் - ஏஎன்ஐ
பகிர்:

வெனிசுவேலாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி; அரசு அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று அவரது மனைவி வியாழக்கிழமை (ஜூலை 2) குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ராகேஷ் சௌகான். இவர் தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம் ​​மாரடைப்பு அல்லது விபத்து காரணமாக வெனிசுவேலாவில் உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பெரும் போராட்டத்தக்குப் பிறகு, அவருடைய உடல் இந்தியா கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ஆகையால், ராகேஷின் உடல் மீண்டும் கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வில் கிடைத்த தகவலின் படி, அவரது உடலில் உடலுறுப்புகள் மாயமானது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராகேஷின் மனைவி பேசியதாவது:

என் கணவர் கப்பலில் வேலை செய்வதற்காக சென்றார். அங்கு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது வரை, நிறுவனத்திடமிருந்து எந்தவொரு முறையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. என் கணவருடைய உடமைகள் எதுவும் திருப்பித் தரப்படவில்லை. நிறுவனம் சார்பில் முறையாக எந்த அதிகாரிகளும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை.

நாங்கள் அவரின் உடல் வந்து சேரும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இங்கு இரண்டாவது உடல்கூராய்வு செய்தபோது, ​​உடலில் ஒரு உறுப்பு கூட மிச்சமிருக்கவில்லை என்று தெரிய வந்தது. நாங்கள் தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் உள்பட பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் என எல்லா இடங்களிலும் புகார் அளித்தோம். ஆனால் எந்தப் பயனும் இல்லை.

நான் கடைசியாக கடந்த மே 6 ஆம் தேதி என் கணவரிடம் பேசினேன். அவர் பணிக்குக் கிளம்பிய இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு விபத்து நடந்துவிட்டதாகவும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகவும் என் மாமனாருக்கு ஒரு அழைப்பு வந்தது என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய முன்னணி மாலுமிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், ராகேஷ் உடலில், இதயம், மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகங்கள் என எந்த முக்கிய பாகங்களும் இல்லை. உடலில் ஏராளமான தையல்கள் போடப்பட்டிருந்தன. ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை 21 தையல்களும், கழுத்திலிருந்து 22 தையல்களும் போடப்பட்டிருக்கின்றன என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

His wife alleged on Thursday (July 2) that no government officials have taken notice of the case of an Indian sailor who died under mysterious circumstances in Venezuela.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments