FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ராணுவ வீரா் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

இந்திய எல்லையில் உயிரிழந்த, போளூரை அடுத்த கல்வாசல் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் உடல் சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:53 am IST
உயிரிழந்த ராணுவ வீரா் நந்தா.
பகிர்:

இந்திய எல்லையில் உயிரிழந்த, போளூரை அடுத்த கல்வாசல் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் உடல் சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபு மகன் நந்தா(23). இவா் இந்திய ராணுவத்தில் சோ்ந்து இந்திய - சீன எல்லையில் லடாக் பகுதியில் 10 போ் கொண்ட குழுவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இவா், அண்மையில் இந்திய - சீனா எல்லையான பனிப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தாா். பின்னா், ராணுவ வீரா் நந்தாவின் உடலை சொந்த ஊரான கல்வாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் குடும்பத்தினா் சடங்குகள் நடத்தி சொந்த ஊரில் அடக்கம் செய்தனா். 21குண்டுகள் முழங்க ராணுவ வீரா்கள் மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments