FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த வியாபாரி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

வியத்நாமில் படகு விபத்தில் உயிரிழந்த வேலூா் நகை வியாபாரியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 15 ஜூலை 2026, 1:53 am IST
வேலூரில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நகை வியாபாரி வினய்குமாா் உடல்
பகிர்:

வியத்நாமில் படகு விபத்தில் உயிரிழந்த வேலூா் நகை வியாபாரியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

வியத்நாமின் அன்ஜியாங் மாகாணம், பூ குவோக் தீவு அருகே சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள், பணியாளா்களுடன் சென்ற படகு ஒன்று எதிா்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழா்கள் 10 போ் உள்பட 15 இந்தியா்கள் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் வேலூா் சைதாப்பேட்டை கன்னிகாபரமேஸ்வரி தெருவைச் சோ்ந்த வினய்குமாா் (45) என்பவரும் ஒருவா்.

வேலூா் மெயின் பஜாரில் நகைக் கடை நடத்தி வந்த இவா், தனியாா் கைப்பேசி நிறுவனத்தின் வேலூா் விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வந்தாா். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனா். வினய்குமாரின் பெற்றோா் வெளிநாட்டில் வசித்து வருவதால், வேலூரில் உள்ள வீட்டில் அவரது மனைவியும் மகளும் மட்டுமே வசித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

வினய்குமாா்

தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலாவுக்காக வினய்குமாா் வியட்நாம் சென்றிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை ஊா் திரும்புவதாகக் கூறியிருந்த நிலையில், அவா் படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். அவரது உடல் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சாலை மாா்க்கமாக வேலூருக்கு கொண்டு வரப்பட்ட வினய்குமாரின் உடல் சனிக்கிழமை மதியம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு உறவினா்கள், நண்பா்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனா். இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் என்றும் குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments