FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் 8 பெண்கள் உள்பட 12 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளது குறித்து...

Updated On : 5 பிப்ரவரி 2026, 3:58 pm IST
சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்...
பகிர்:

சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் செயல்பட்டு வந்த 12 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்பட 12 மாவோயிஸ்டுகள் இன்று (பிப். 5) காவல் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏகே - 47 மற்றும் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள், வெடி பொருள்கள் ஆகியவற்றை அவர்கள் தாங்களாகவே முன்வந்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், அவர்களைப் பிடிக்கக் கூட்டாக ரூ.54 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள்படி சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் மறுவாழ்விற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

முன்னதாக, பிஜப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 888 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மேலும், 231 பேர் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், வரும் மார்ச் 31-க்குள் நாட்டிலுள்ள மாவோயிஸ்டுகள் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Twelve Maoists who were operating in the Bastar region of Chhattisgarh have surrendered to the security forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments