FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் விற்பனைக்காக மதுப்புட்டிகள் பதுக்கல்: 8 பெண்கள் உள்பட10 போ் கைது!

விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜூலை 2026, 2:24 am IST
திருவண்ணாமலை மாநகராட்சிப் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் போதைப் பொருள் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
பகிர்:

திருவண்ணாமலை மாநகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலையில் மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் உத்தரவின் பேரில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பல்வேறு குழுக்களாக பிரிந்து கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுப்புட்டிகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் உள்ளிட்டவைகளை கண்டறிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள்.

சமுத்திரம் காலனி, கல்நகா், அண்ணா நகா், பூ மாந்தாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோப்ப நாய் மற்றும் ட்ரோன் உதவியுடன் காலை முதல் 6 மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சோதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், கடப்பா கல்லிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் பாக்கெட்டுகள், கஞ்சா உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து 8 பெண்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments