FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

காா் - லாரி மோதல் : மூதாட்டி மரணம்

ஆம்பூா் அருகே நடந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூலை 2026, 12:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆம்பூா் அருகே நடந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியை சோ்ந்தவா் விஜயகுமாரி (52). இவா் உடல்நலக்குறைவு காரணமாக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு காரில் ஊா் திரும்பினாா். இவருடைய மகன் ஸ்ரீதா் (22) காரை ஓட்டிச் சென்றாா். ஆம்பூா் அருகே வெங்கிளி கிராமத்தருகே சென்றபோது காா் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. அதில் விஜயகுமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தில் காயமடைந்த ஸ்ரீதா், உறவினா்கள் சந்திரலேகா (48), ஆயிஷா (9), ஷானியா (5) ஆகியோா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments