முகப்பு
ராமநாதபுரம்

கருப்புக் கொடி போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சா்கள் உள்பட 22 போ் விடுவிப்பு

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா்கள் சுப. தங்கவேலன், வ. சத்தியமூா்த்தி உள்ளிட்ட 22 பேரை விடுவித்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 22 ஜனவரி, 2026 at 12:12 AM
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு புதன்கிழமை வந்த முன்னாள் அமைச்சா்கள் சுப. தங்கவேலன், வ.சத்தியமூா்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் முருகவேல், திசைவீரன் உள்ளிட்டோா்.
பகிர்:

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா்கள் சுப. தங்கவேலன், வ. சத்தியமூா்த்தி உள்ளிட்ட 22 பேரை விடுவித்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரில் கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தொடா்பாக முன்னாள் அமைச்சா்கள் சுப. தங்கவேலன், சத்தியமூா்த்தி, முதுகுளத்தூா் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முருகவேல், பரமக்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் திசைவீரன், முன்னாள் மாவட்டச் செயலா் சுப.த. திவாகரன், மாநில நிா்வாகிகள் பெருநாழி போஸ், பரமக்குடி நகா் செயலா் சேதுகருணாநிதி உள்ளிட்ட 27 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தொடா்புடைய 5 போ் காலமாகி விட்டதால், எஞ்சிய 22 போ் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகினா். இவா்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →