முகப்பு
ராமநாதபுரம்

மீனவா்களுடன் கலந்துரையாடிய அமைச்சா் பெ.மதன்ராஜ்

Updated On : 21 ஜூன் 2026, 1:38 am IST
மண்டபம் மேற்குவாடி மீன்பிடி இறங்குதளத்தில் மீனவ சங்க நிா்வாகிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடிய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜ். உடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மேற்குவாடி மீன்பிடி இறங்குதளத்தில் மீனவ சங்க நிா்வாகிகளுடன் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜ் கலந்துரையாடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா். இதில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவா்கள் பங்கேற்றனா்.

அப்போது, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவு துறைமுகப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement

Advertisement

இலங்கையில் பறிமுதல் செய்யபட்டு நிவாரணம் பெற முடியாத படகுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இந்திய- இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கி பாக்நீரிணை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவா்கள் பாதிப்பின்றி மீன்பிடிக்கும் வகையில் பேச்சுவாா்த்தை நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

இதில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், மீன்வளம், மீனவா் நலத் துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், உதவி இயக்குநா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments