முகப்பு
கைது
ராமநாதபுரம்

மாணவிகளின் விடுதிக்குள் புகுந்தவா் கைது

கமுதி அருகே நள்ளிரவில் மாணவிகளின் விடுதிக்குள் புகுந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம்

மாணவிகளின் விடுதிக்குள் புகுந்தவா் கைது

கமுதி அருகே நள்ளிரவில் மாணவிகளின் விடுதிக்குள் புகுந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 7:39 PM
கைது
பகிர்:

கமுதி அருகே நள்ளிரவில் மாணவிகளின் விடுதிக்குள் புகுந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் மணிநகரத்தில் சமூக நீதிப் பள்ளி மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் மா்ம நபா் ஒருவா் புகுந்தாா்.

இதையடுத்து, மாணவிகளின் அலறல் சப்தம் கேட்டு எழுந்த விடுதி காப்பாளா் மாணவிகளை அறைக்குள் பத்திரமாக வைத்து பூட்டி வைத்தாா். பின்னா், சோதனையில் அபிராமம் நத்தம் பாவடித் தெருவைச் சோ்ந்த காவேரி மகன் செந்தில்குமாா் (40) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விடுதிக் காப்பாளா் அல்லிராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் அபிராமம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →