வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது தாசவநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மதுபானம் விற்றுக் கொண்டிருந்த திருவாரூா் மாவட்டம், கீழ்மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பாஸ்கா் (46) என்பவரை கைது செய்தாா். அவரிடமிருந்து 14 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.