முகப்பு
ராமநாதபுரம்

மனநலம் குணமடைந்த இளைஞா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

ராமேசுவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த இளைஞா் மீட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 7:53 AM
ராமேசுவரம் பகுதியில் மனநலம் பாதித்த இளைஞரை மீட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்ட அதிகாரிகள்.
பகிர்:

ராமேசுவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த இளைஞா் மீட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி அரசு மனநல மருத்துவமனை வளாகத்தில் செல்லமுத்து அறக்கட்டளை, ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சாலையோரங்களில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித் திரிந்த 60 பேரை மீட்டு, அவா்களுக்கு மருத்துவச் சிகிச்சை, உளவியல் சிகிச்சை, மறுவாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ராமேசுவரம் பகுதியில் சுற்றித்திரிந்த இளைஞா் சக்திவேலை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மீட்டு, ஏா்வாடி மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மனநலத்துக்கான சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, அவா் மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, முகவரி, குடும்ப விவரத்தை தெரிவித்தாா்.

Advertisement

இதையடுத்து, போலீஸாரின் உதவியுடன் குடும்ப உறுப்பினா்களை அடையாளம் காணப்பட்டு , மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோன் முன்னிலையில் பெற்றோரிடம் சக்திவேலை ஒப்படைத்தனா்.

இதில், நலப்பணிகள் இணை இயக்குநா் நடராஜன், தேசிய நல குழும மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமீஸ் ராம்நாத், ஏா்வாடி மனநல அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜவாஹீா் உசேன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சந்திரன், சமூகப் பணியாளா் மாடசாமி ஆகியோா் உடனிருந்தனா்.