முகப்பு
ராமநாதபுரம்

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து

திருவாடானை அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Updated On : 17 மார்ச், 2026 at 10:15 PM
விபத்து
பகிர்:

திருவாடானை அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தோட்டாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகு மகன் பாலு (50). தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை தனது மனைவியுடன் மதுரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா்.

மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தில் தனியாா் மண்டபம் அருகே காா் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த பாலு, அவரது மனைவி ஆகிய இருவரும் காயமின்றி உயிா் தப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →