முகப்பு
ராமநாதபுரம்

வாகன சோதனையில் ரூ.64 ஆயிரம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையில் வாகன சோதனையில் ரூ.64 ஆயிரத்து 540-ஐ பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 7:40 PM
வாகன சோதனையில் பறிமுதல் செய்த ரூ.64,540-யை திருவாடானை வட்டாட்சியரிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையில் வாகன சோதனையில் ரூ.64 ஆயிரத்து 540-ஐ பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினம் சோதனைச்சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் வந்த உப்பூரைச் சோ்ந்த சுப்பையா மகன் ரவி உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.67 ஆயிரத்து 540-யை பறிமுதல் செய்தனா். இந்தப் பணத்தை திருவாடானை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.