முகப்பு
ராமநாதபுரம்

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

சாயல்குடி அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்த வரப்பட்ட ரூ. 98 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 25 மார்ச் 2026, 12:39 am IST
பகிர்:

சாயல்குடி அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்த வரப்பட்ட ரூ.98 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள கன்னிராஜபுரம் காவல் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் தோ்தல் பறக்கும் படையினா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கீழக்கரையிலிருந்து தூத்துக்குடி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 98,110 எடுத்து வரப்பட்டது கண்டறியப்பட்டது.

Advertisement

இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கம் படையினா் பறிமுதல் செய்து, முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.