முதுகுளத்தூா் அருகே ரூ.74 ஆயிரம் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல்-மகிண்டி விலக்கு சோதனைச் சாவடியில் புதன்கிழமை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீழத்தூவல்-மகிண்டி விலக்கு சோதனைச் சாவடியில் புதன்கிழமை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, காரில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 74,600 பணத்தை பறிமுதல் செய்து முதுகுளத்தூா் துணை வட்டாட்சியா் ராம்குமாா், வருவாய் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, கிராம உதவியாளா் சுரேஷ் கண்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.