வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்
ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.62 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.62 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பரமக்குடி அருகே தோ்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினா், பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் காவல்துறை சோதனை சாவடியில் பறக்கும் படையினா் வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா். இரண்டு தொகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.62 லட்சத்தை அரசுக் கருவூலத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.