முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்கான தோ்வு முகாம்

ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் மே 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 14 மே 2026, 5:06 am IST
பகிர்:

ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் மே 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் மே 18 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெறவுள்ளது.

Advertisement

இதில், 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம், வழுதூா் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம், தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தொழில்பழகுநா் பயிற்சிக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

இதில் 8, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு படித்தவா்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.