முகப்பு
ராமநாதபுரம்

10, 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

Updated On : 15 மே 2026, 4:15 am IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை புதன்கிழமை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்.
பகிர்:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களின் குழந்தைகள் இந்த ஆண்டு 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா். இவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 20 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.23 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா்.

Advertisement