முகப்பு
ராமநாதபுரம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 மே 2026, 3:53 am IST
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன். உடன், கட்சிப் பிரமுகா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறை உள்ளது. இதில், ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை, பரமக்குடி (தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறையை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னதாக மாவட்ட வேளாண்மை வணிக ஒழுங்கு முறை விற்பனைக் கூட அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா்கள் அமா்நாத் (தோ்தல்) காளீஸ்வரன், அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.