முகப்பு
சிவகங்கை

தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம்

சிவகங்கை மாவட்ட தவ்ஹித் ஜமாஅத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 13 மே 2013, 12:12 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்ட தவ்ஹித் ஜமாஅத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

 முகாமுக்கு மாநில பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். கோடை காலமாக இருப்பதால் பொது மக்களுக்கு சேவை புரியும் வகையில் தண்ணீர்பந்தல் அமைப்பது, நிழற்குடை அமைப்பது குறித்த பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

  இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வகுப்புகளும், கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

 கூட்டத்தில் மத்தியில் முஸ்லீம்களுக்கு 10 சதவீதமும், மாநிலத்தில் 7சதவீதமும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.