ஸ்ரீ ராஜராஜன் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அகரம் சர்வீஸ் அமைப்பு ஆகியன சார்பில் டிப்ளமோ பயின்ற மாணவர்களுக்கு வேலைவாயப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.
காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அகரம் சர்வீஸ் அமைப்பு ஆகியன சார்பில் டிப்ளமோ பயின்ற மாணவர்களுக்கு வேலைவாயப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாம் தொடக்கவிழாவில் அழகப்பா பல்கலைக் கழக ஆங்கிலத்துறை தலைவர் சுப்பையா தலைமைவகித்துப் பேசினார். கல்லூரியின் வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை வரவேற்றார்.
புகழ்பெற்ற கேட்டர்பில்லர் நிறுவனம் முதல்முறையாக தமிழகத்தின் தென்மாவட்டங் களில் தனது நிறுவனத்திற்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்யும் நோக்குடன் நிறுவனத்தின் தொழில்துறை நல அலுவலர் விஜய், பணியாளர் பயிற்றுநர் ஸ்ரீமதி ஆகியோர் நேர்காணலை நடத்தினர்.
Advertisement
Advertisement
மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், டூல் அன்டு டை பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 150-க் கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்காணலில் பங்கேற்றதில் 23 பேர் தேர்வு செய்யப்பட்ட னர்.
தேர்வு பெற்ற மாணவர்களை சென்னை அகரம் சர்வீஸ் அமைப்புன் இயக்குநர் அருள் சபரிநாதன் வாழ்த்தினார்.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு பஸ் வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது. முடிவில் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் அனிதா கார்திகேயன் நன்றி கூறினார்.