சிவகங்கை

காரைக்குடியில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

காரைக்குடி கழனிவாசல் குரூப் பகுதியில் நீர் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினர்.
காரைக்குடி நகராட்சி 1ஆவது வார்டில் கழனிவாசல் கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து செல்லஞ்செட்டி ஊரணி செல்லும் பகுதியில் 7 வீடுகள் மற்றும் வணிகத் தொடர்புடைய சுவர் வரத்துக்கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர் நாகநாதன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கழனிவாசல் கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்திற்கு விடுமுறை வழங்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகை திருட்டு

கங்கனாங்குளத்தில் தேனீ வளா்த்தல் பயிற்சி

காருக்குறிச்சியில் மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி

தரைப் பாலத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT