சிவகங்கை

பயிர் காப்பீட்டுத் தொகை கோரி சாலை மறியல்: 70 பேர் கைது

DIN

பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை உடனே வழங்கக்கோரி காரைக்குடி அருகே புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சாக்கோட்டை ஒன்றியக்கிளை சார்பில் புதுவயல் மேட்டுக்கடை பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சிதம்பரம் தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் முத்துராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாண்டித்துரை, சின்னத்துரை (திமுக) மற்றும் பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த விவசாயிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். மேட்டுக்கடைப்பகுதியில் வந்த அரசு நகர் பேருந்தை மறித்து தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து சாக்கோட்டை காவல் நிலைய போலீஸார் அவர்களை தடுத்து 70 பேரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT