குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
காரைக்குடி அழகப்பா கல்வி குழுமத்தின் சார்பில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது.
காரைக்குடி அழகப்பா கல்வி குழுமத்தின் சார்பில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது.
அழகப்பா கல்வி குழும விழா அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு அழகப்பா கல்வி குழுமத்தின் தலைவர் ராமநாதன் வைரவன் தலைமை வகித்தார்.காரைக்குடி வட்டாட்சியர் கே.மகேஸ்வரன் முன்னிலை வகித்து இலவச பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். இதில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் கா.செல்வம், இச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எஸ்.லோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். பெறும் மாணவ,மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணைய தேர்வுகள் குறித்து முன் அனுபவமுள்ள சிறந்த பயிற்றுநர்கள்,ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்த உள்ளனர்.
மேலும், வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். தொடக்க விழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.