முகப்பு
செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் பட டீசர் அப்டேட்

சூர்யாவின் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் திரைப்பட டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 14 மார்ச், 2026 at 4:59 PM
விஸ்வநாத் அன்ட் சன்ஸ்
பகிர்:

சூர்யாவின் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் திரைப்பட டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’. இதனை நாக வம்சி தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

Advertisement

ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு சூர்யா - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

நடுத்தர வயது மனிதனுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.

படம் வரும் ஜூலை மாதம் வெளியாகிறது. ஏற்கெனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்த நிலையில் படத்தின் டீசர் மார்ச் 16-ம் தேதி மாலை 4.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது.

summary

An update on the teaser of Suriya's Vishwanath and Sons has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.