விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீடு குறித்து...
நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லுரி தற்போது சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.
தொழிலதிபராக சூர்யா நடித்துள்ள இப்படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
தன்னைவிட 20 வயது குறைவான நாயகியின் காதலை ஏற்க மறுக்கும் நாயகனின் கதையாக இப்படம் எழுதப்பட்டுள்ளது.
இதன் அறிமுக போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி கவனம் பெற்றதுடன் சூர்யாவுக்கும் மமிதா பைஜுவுக்குமான காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த நிலையில், இப்படத்தை ஜூலை 24 ஆம் தேதியில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
சூர்யாவின் கருப்பு மே 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.