மானாமதுரையில் ஐயப்பன் பவனி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஐயப்ப சுவாமி பவனி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஐயப்ப சுவாமி பவனி நடைபெற்றது.
மானாமதுரை அண்ணாசிலை அருகே தெற்குரத வீதியில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வந்து அங்கு நடக்கும் பூஜைகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். புதன், சனிக்கிழமைகளில் ஐயப்ப பக்தர்கள் கூடி பஜனை நடத்தி அன்னதானம் செய்து வருகின்றனர். இந் நிலையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, அதில் ஐயப்பன் உருவப்படத்தை வைத்து மேளதாளம் முழங்க மானாமதுரை நகர் முழுவதும் பவனி நடைபெற்றது. முன்னதாக மலர் அலங்காரத்துடன் யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் ஐயப்பன் தேரோடும் வீதிகளில் வலம் வந்தார்.