சிவகங்கை

இந்திய சுதந்திர தின விழா: புகைப்படப் போட்டி

அஞ்சல்துறை சார்பில் இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு புகைப்படம் எடுக்கும் போட்டி நடத்தப்படுவதாக காரைக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் வே. மாரி யப்பன் தெரிவித்துள்ளார்.

DIN

அஞ்சல்துறை சார்பில் இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு புகைப்படம் எடுக்கும் போட்டி நடத்தப்படுவதாக காரைக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் வே. மாரி யப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல்துறை பொதுமக்களிடையே கடிதம் எழுதும் போட்டி,  ஓவியப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. தற்போது 18 வயதிற்குமேற்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளும் வகை யில் இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு புகைப்படம் எடுக்கும் போட்டி நடத்தப்படுகிறது.
"அழகான பாரதம்' என்ற தலைப்பில் புகைப்படம் எடுத்து ஏ-4 அளவு உறையில் புகைப்படம் மற்றும் சிடி-யில் பதிவு செய்து A​DG (PH​I​L​A​T​E​LY), RO​OM NO: 108 B, D​AK BH​A​W​AN, PA​R​L​I​A​M​E​NT ST​R​E​ET, NEW DE​L​HI - 110 001 என்ற முகவரிக்கு வரும் 25.07.2017-ம் தேதிக்குள் விரைவு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் p‌h‌i‌l​a‌t‌e‌l‌y​c‌o‌m‌p‌e‌t‌i‌t‌i‌o‌n@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகைப்படத்தை அனுப்பலாம்.
புகைப்படத்தின் பின்புறம் போட்டியாளரின் பெயர், வயது, பாலினம், வீட்டு முகவரி, தொலைபேசி அல்லது செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அஞ்சல் உறையின் மேல் போட்டியின் விவரம் குறிப்பிடவேண்டு.
இப்போட்டிக்கு முதல் பரிசு ரூ. 10,000, 2-ம் பரிசு ரூ. 6,000, 3-ம் பரிசு ரூ. 4,000 என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுநேத்ரா பவாருடன் என்சிபி தலைவர்கள் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜித் பவார் விரும்பினாரா? - சரத் பவார் பதில்!

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பரப்புரை!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை” - முதல்வர் மு . க. ஸ்டாலின்!

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

SCROLL FOR NEXT