சிவகங்கை

எடை கற்கள் முறைகேடு: தொழிலாளர் நல ஆய்வாளர் திடீர் ஆய்வு

DIN

தேவகோட்டையில் வாரச் சந்தை மற்றும் சாலையோரக் கடைகளில் தராசு மற்றும் எடைக் கற்களில் முறைகேடுகளைத் தடுக்க, தொழிலாளர் நல ஆய்வாளர் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
   சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வாரச் சந்தையில் காய்கறி வியாபாரிகள் எடை கற்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக, தொழிலாளர் நல ஆய்வாளர் மைதிலி செல்விக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன.
  அதனடிப்படையில், அவர் ஞாயிற்றுக்கிழமை தேவகோட்டை வாரச் சந்தை மற்றும் நடைபாதைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
   அப்போது, காய்கறி நிறுவையில் எடைக் கற்கள் மற்றும் தராசுகளில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட தராசுகள் மற்றும் 300-க்கும் மேற்ற எடைக் கற்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT