சிவகங்கை

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

தேவகோட்டை அருகே உள்ள வீழிமார் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு ஆட்சியர் சு.மலர்விழியிடம் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.
     அவர்கள் அளித்த மனு விவரம்: தேவகோட்டை வட்டம் தூணுகுடி ஊராட்சிக்குட்பட்ட வீழிமார், தும்பதிடல், வெள்ளகுடி, அனுமனேந்தல் ஆகிய கிராமங்களில் குடிநீர், தெருவிளக்குகள், சாலை வசதி உள்ளிட்டவை போதுமானதாக இல்லை.
கடும் வறட்சி நிலவும் தற்போதைய காலகட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலிருந்தும் கடந்த சில மாதங்களாக வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே குடிநீர், தெருவிளக்குகள் அமைத்தல், சாலை வசதி, நூறு நாள் வேலை வாய்ப்பு போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

SCROLL FOR NEXT