சிவகங்கை

கோவிலூர் மடாலயத்தில் தாலாட்டுப் பாடல் படப்பிடிப்பு

DIN

காரைக்குடி அருகே கோவிலூர் மடாலயத்தில் ஆவணப்படுத்தும் விதமாக தாலாட்டுப்பாடல் படப்பிடிப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
செட்டிநாடு பகுதியில் தாலாட்டுக்கள் தமிழ்நேயத்தோடும், பண்பாட்டை விளக்கும் வகையிலும் உணர்வுப் பூர்வமாகவும் பாடப்பட்டு வந்தது.
மாறிவரும் உலக சூழலில் தாலாட்டுப் பாடல்கள் அதிகம் பாடப்படுவதில்லை.
தாலாட்டுப் பாடல்கள் அழிந்துவிடமால் ஆவணப்படுத்தும் முயற்சியில் கோவிலூர் மடாலயம் ஈடுபட்டுள்ளது. இதன்படி சனிக்கிழமை நடைபெற்றத் தாலாட்டுப்பாடல் படப்பிடிப்பினை கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் தொடங்கிவைத்தார். மடாலய மக்கள் தொடர்பு அலுவலர் குமரப்பன், நபார்டு வங்கி ஓய்வுபெற்ற அதிகாரி கண்ணப்பன், தகவல் ஊடகவியல் துறைத்தலைவர் ராமசாமி ஆகியோர் படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதில் செட்டுநாடுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டு தற்போது மதுரை, திருச்சி, கோவை
போன்ற பகுதிகளில் வசித்துவரும் பலர் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு தாலாட்டுப் பாடல்களை பாடினர். இதனை நாச்சியப்ப சுவாமிகள் கலைஅறிவியல் கல்லூரி விஸ்காம் மாணவர்கள் படம் பிடித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT