சிவகங்கை

இளையான்குடி பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
திருச்சியிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீர் புதுக்கோட்டை,சிவகங்கை, மறவமங்கலம,இளையான்குடி ஆகிய பகுதி வழியாக ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  இதன்மூலம் இளையான்குடி ஒன்றியத்துகுள்பட்ட 54 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிக்க தண்ணீரின்றி உப்பு தண்ணீரை குடித்து வருவதாகவும், தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 ஆகவே, இப்பகுதிக்கு காவிரிக் கூட்டுக் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT