சிவகங்கை

திருப்பத்தூர் கிறிஸ்துராஜா பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் பள்ளி பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
   பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றமைக்கு, பள்ளி நிறுவனர் ஏ.டி. விக்டர், பள்ளி முதல்வரும், தாளாளருமான ரூபன் ஆகியோர் மாணவ, மாணவியரை பாராட்டினர்.   இப்பள்ளியில், எஸ். ஆப்ரின் ரிபானா என்ற மாணவியும், எஸ். ஹரிராமகிருஷ்ணன் என்ற மாணவரும் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  மேலும், 5 மாணவர்கள் 490 மதிப்பெண்களுக்கும் அதிகமாகவும், 10 மாணவர்கள் 480-க்கும் அதிகமாகவும், 60 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கும் அதிகமாகவும் பெற்றுள்ளனர்.    இவர்களில் 10 மாணவர்கள் கணிதத்திலும், 12  மாணவர்கள் அறிவியலிலும், 17 மாணவர்கள் சமூக அறிவியலிலும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.  இவர்களை, பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் வாழ்த்தி பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

திருவள்ளூர்அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT