சிவகங்கை

பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரிக்கு கெளரவ விரிவுரையாளர்கள் தேவை

DIN

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரிக்கு பட்டப் படிப்புடன் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்த தகுதியான கெளரவ விரிவுரையாளர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கல்லூரி முதல்வர் கருப்பன் வெளிட்டுள்ள செய்திக் குறிப்பு: அகில இந்திய ஆட்சிப் பணி பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். ஆகியவற்றுக்கும், வங்கி, ரயில்வே, எல்.ஐ.சி. உள்ளிட்ட மத்திய அரசு பணிக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கும், மாணவர்களுக்கு தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த விருப்பமுள்ள பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி முழு கல்வித் தகுதி பெற்றவர்களிடமிருந்து கெளரவ விரிவுரையாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கணினி, அறிவியல், வேதியியல், கணிதம், விலங்கியல், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தகுதியுள்ள நபர்கள் தன் சுயவிவரப் பட்டியலுடன் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT