சிவகங்கை

மணல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து தீப்பற்றி சேதம்

DIN

திருப்புவனம் அருகே வியாழக்கிழமை மணல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
   மதுரை-ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்புவனம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப் பணிக்காக, சவடு மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தது. வில்லியரேந்தல் விலக்குப் பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அப்போது டீசல் டேங்க் வெடித்ததால், லாரி தீப்பிடித்து எரிந்தது.
   இந்த விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் முத்துப்பாண்டியை அருகிலிருந்தவர்கள் காப்பாற்றினர். அதையடுத்து, மதுரையிலிருந்து தீயணைப்புப் படையினர் வந்து லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும், லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT