சிவகங்கை

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

DIN

காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியில் சிவகங்கை மாவட்டக் காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு காரைக்குடித் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் வின்சென்ட் தலைமை வகித்துப் பேசினார்.  உதவித் தலைமையாசிரியர் லெ. பழனியப்பன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் முரு.வள்ளியப்பன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் விளக்கிப் பேசினர். பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சேவு. முத்துக்குமார், காவல்சார்பு ஆய்வா ளர்கள்அரவிந்தராஜன், கண்ணப்பன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வுத் தகவல்கள் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. சாலைப் பாதுகாப்புப் படை ஒருங்கிணைப்பாளர் ஜெ. பிரகாஷ் மணிமாறன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சுற்றுவாரியாக மின்னணு திரையில் முடிவுகள் வெளியீடு: ஆட்சியா்

SCROLL FOR NEXT