சிவகங்கை

காளையார்கோவில் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

DIN

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் உள்ள கிராமங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் க.லதா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
காளையார்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட மேலமங்கலம், கருங்காலக்குடி, உடகுளம், பேச்சாத்தக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வினை மேற்கொண்ட அவர் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்துள்ளதா என ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது காளையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் டி.என்.அன்புதுரை, சுகாதார ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT