முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் ஆய்வு

சிவகங்கையில் வரும் நவ.18இல்நடைபெறும்எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சிவகங்கையில் வரும் நவ.18இல்நடைபெறும்எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
 சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வரும் நவ.18ஆம் தேதி(சனிக்கிழமை) எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளான மேடை அமைத்தல், பொதுமக்கள் அமர்ந்து பார்வையிடுவதற்கான அரங்கம் அமைத்தல்,
வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
 இந்த பணிகளை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, கோட்டாட்சியர் என்.சுந்தரமூர்த்தி,முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுகவினர்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →