சிவகங்கை

இளநிலை பட்டு ஆய்வாளர் பணி: பதிவு மூப்பை இன்று சரிபார்க்கலாம்

DIN

சேலம் பட்டு வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள இளநிலை பட்டு ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், தங்களது பதிவு மூப்பினை வெள்ளிக்கிழமை (அக்.13) சரிபாத்துக் கொள்ளலாம்.
        இது குறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள 378 இளநிலை பட்டு ஆய்வாளர்  பணியிடங்களுக்கு, தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அண்மையில் அந்தத் துறையின் இயக்குநரால் அறிவிப்பாணை  வெளியிடப்பட்டது.
    இப் பணிக்கு, மாநில அளவில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக வேதியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன், இளநிலை பட்டு ஆய்வாளர் சான்றிதழுக்கான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 1.7.2017 அன்றைய தேதி நிலவரப்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்கு மிகாமலும், பொதுப் பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
    இவை தவிர, வேலை அளிப்போரால் அறிவிக்கப்பட்டபடி ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்டுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
      மேற்கண்ட கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புக்குள்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, முன்னுரிமைச் சான்றிதழ் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு  சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து தங்களது பெயர் மேற்கண்ட பணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை அறிந்து விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT