முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளுக்கான முதுகலை பாடப்பிரிவு தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லுரிகளுக்கான நவம்பர் 2017 இல் நடைபெற்ற முதுகலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லுரிகளுக்கான நவம்பர் 2017 இல் நடைபெற்ற முதுகலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
   எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், எம்.எஸ்சி., இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிர் வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் டபிள்யூ டபிள்யூ டபிள்யூ. அழகப்பா யுனிவர்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
  இம்முடிவுகள் வெளியான பின் 5.3.2018-க்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலைக் கழக இணையதளத்தின் மூலம் பெற்று மறுமதிப்பீட்டுக்கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.500, பதிவாளர் அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை செலுத்தி தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு அழகப்பா பல்கலைக்கழக தேர்வாணையர் பி. சக்திவேல் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →