மார்நாடு கருப்பணசுவாமி கோயிலில் மார்ச் 2-இல் களரி உற்சவம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மார்நாடு கிராமத்திலுள்ள ஸ்ரீகருப்பண சுவாமி கோயிலில் களரி உற்சவ விழா வரும் மார்ச் 2 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மார்நாடு கிராமத்திலுள்ள ஸ்ரீகருப்பண சுவாமி கோயிலில் களரி உற்சவ விழா வரும் மார்ச் 2 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.
இவ்விழாவின் போது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் பக்தர்கள் மலர் மாலைகளை சுவாமிக்கு செலுத்தி தரிசனம் செய்வார்கள். நள்ளிரவு கோயில் முன்பு உள்ள களரிப் பொட்டலில் விடிய விடிய சாமியாட்டம் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு மார்நாடு கிராமத்துக்கு மதுரை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஊர்களிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை மார்நாடு சீமை கிராமத்தார் செய்து வருகின்றனர்.