சிவகங்கை

பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதிகளிகளிலிருந்து விலக்கு அளிக்க  ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை

DIN

பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் காரைக்குடி ச.திருஞானம் பிரதமர் மோடி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் கர்ஷ்வர்தன் ஆகியோருக்கு சிவகாசி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவில் பட்டாசுத் தயாரிப்பு 80 சதவீதம் சிவகாசிப் பகுதியில் தான் நடக்கிறது. இங்கு 870 தொழிற்சாலைகள் பட்டாசு தயாரிப்புகாகவே இயங்குகின்றன. நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைசெய்கிறார்கள். பட்டாசு இயந்திரங்களைக்கொண்டு உற்பத்தி செய்யமுடியாது. இங்கு தயாரிப்பு முழுக்க மனித ஆற்றலைக் கொண்டுதான் பட்டாசுத் தொழில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பட்டாசு உற்பத்திக்குத் தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த காரணத்தால் 26.12.2017 முதல் அனைத்துத் தொழிற்சாலைகளையும் மூடி முதலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிவகாசி பகுதி முழுவதும் போராட்டக்களமாக மாறியுள்ளது. அன்றாட வேலைக்குச்செல்லும் தொழிலாளர்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமான சூழ்நிலையைச்சந்திக்க வேண்டியுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT