முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் ஒய்எம்சிஏ மண்டல மாநாடு

ஒய்எம்சிஏ-ன் மதுரை மண்டல மாநாடு காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:07 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஒய்எம்சிஏ-ன் மதுரை மண்டல மாநாடு காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஒய்எம்சிஏ-ன் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்துக்கு நடைபெற்ற இம்மாநாட்டில் ஒய்எம்சிஏ தென்பிராந்திய தலைவர் அசோகன்சாலமோன், செயலர் பால்சன்தாமஸ், மகளிர் மற்றும் இளைஞர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் நடை பெற்ற நிர்வாகிகள் தேர்தலில் காரைக்குடியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் மண்டலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 நிகழ்ச்சியில், தென்னிந்திய திருச்சபை குருக்கள் கிங் சாமுவேல் சற்குணம், ஜெகதீஷ் கிருபாகரன், ஜேம்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. முன்னதாக சிவகங்கை ஒய்எம்சிஏ தலைவர் சாமிதாஸ் வரவேற்றார். சிவகங்கை ஒய்எம்சிஏ செயலர் மனோகர் ஹென்றி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.